தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 23, 2021, 6:53 AM IST

ETV Bharat / crime

வரதட்சணை கொடுமை: தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் கணவர், மாமியாருக்கு 7 ஆண்டு சிறை!

வரதட்சணை கொடுமையால் மனைவி உயிரிழப்புக்கு காரணமான கணவன் மற்றும் உறவினருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வரதட்சணை கொடுமை
வரதட்சணை கொடுமை

சென்னை: ஒட்டேரி பாஷ்யம் 2ஆவது தெருவைச் சேர்ந்த வாகன ஓட்டுநர் வேலாயுதம் (28) என்பவருக்கும் சூர்யா என்ற பரிமளாகாந்தி என்பவருக்கும் 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் திருமணம் நடந்தது.

திருமணத்தின் போது பெண் வீட்டார் தரப்பில் 12 பவுன் நகை வரதட்சணையாக கொடுத்துள்ளனர். இருந்தபோதிலும் கூடுதல் வரதட்சணை கேட்டு வேலாயுதம், அவரது தாயார் பேபியம்மாள்(60) ஆகியோர் சூர்யாவை துன்புறுத்தி வந்துள்ளனர்.

இதன்காரணமாக 2014 செப்டம்பர் மாதம், சூர்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஒட்டேரி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து வேலாயுதம், பேபியம்மாள் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது. அரசு தரப்பில் சிறப்பு அரசு வக்கீல் எல்.ஸ்ரீலேகா ஆஜராகி வாதாடினார்.

வழக்கை விசாரித்த நீதிபதி டி.எச்.முகமது பாரூக், குற்றஞ்சாட்டப்பட்ட வேலாயுதம், பேபியம்மாள் ஆகியோர் மீதான வரதட்சணை கொடுமை, வரதட்சணை கொடுமையால் மரணம் ஆகிய குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி இருவருக்கும் தலா 7 ஆண்டு சிறை தண்டனையும், தலா 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும், அபராத தொகையில் சூர்யாவின் தந்தை லோகநாதன், தாயார் செல்லம்மாள் ஆகியோருக்கு தலா ரூ.10 ஆயிரம் நிவாரணமாக வழங்க வேண்டும் என்று தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.

அதுமட்டுமல்லாமல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு விசாரணை நடத்தி சூர்யாவின் பெற்றோருக்கு உரிய நிவாரண உதவி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:சேலம்; கிணற்றில் எலும்புக் கூடாய் மிதந்த கல்லூரிப் பெண்

ABOUT THE AUTHOR

...view details