விருதுநகர்: சாத்தூர் பஞ்சாயத்து அலுவலகம் அருகே கிணற்றில் ஆண் சடலம் மிதப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட ஆண் சடலம் - dead body found in virdhunagar
சாத்தூர் அருகே கிணற்றிலிருந்து ஆண் சடலம் மீட்கப்பட்டது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர், தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரர்களின் உதவியுடன் கிணற்றிலிருந்து சடலத்தை மீட்டனர். இறந்தவரின் பணப்பையை சோதித்த போது, இறந்தவர் பஞ்சாயத்து காலணியை சேர்ந்த தருண்குமார்(35) என்பது தெரியவந்தது.
காவல்துறையினர் விசாரணையில், மதுப்பழக்கம் உள்ள ஆட்டோ ஓட்டுனரான அருண்குமாருக்கும், அவரது மனைவி பிரியாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு முன் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் அன்று வீட்டை விட்டு சென்ற அருண்குமார், வீடு திரும்பவில்லை. இந்நிலையில், அருண்குமாரின் உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.