வேலூர்: தெற்கு காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றிவருபவர் பிரபு (33). இவர் தனது பாரத ஸ்டேட் வங்கிக் கணக்கில் நீண்ட நாள்களாகப் பணம் எதுவும் வைக்காமலும், பயன்படுத்தாமலும் இருந்துள்ளார்.
இந்நிலையில், பிரபுவின் செல்போனுக்கு குறுந்தகவல் ஒன்று வந்துள்ளது. அதில், பிரபு வங்கிக் கணக்கைப் புதுப்பிக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் கணக்கு முடக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் விவரங்களைத் தெரிவிக்க போலியான ஆன்லைன் முகவரி (Web address) ஒன்றும் கொடுக்கப்பட்டிருந்தது.
வங்கிக் கணக்கில் மோசடி
வங்கிக் கணக்கில்தான் பணம் இல்லையே, விவரங்களைப் பதிவுசெய்தால் என்ன ஆகிவிடப்போகிறது என்ற அறியாமையில் பிரபு போலி ஆன்லைன் முகவரியில் அவரது வங்கிக் கணக்கு, இதர முக்கிய விவரங்களைப் பதிவுசெய்துள்ளார்.
அப்போது, குறுந்தகவலை அனுப்பியிருத்த அடையாளம் தெரியாத நபர்கள், பிரபு பதிவுசெய்த விவரங்கள் மூலம் அவருடைய வங்கிக் கணக்கில் 80 ஆயிரம் ரூபாய்க்கு லோன் விண்ணப்பித்தனர். அந்தப் பணம் பிரபுவின் வங்கிக் கணக்கில் கிரெடிட் ஆனது. அடுத்த சில நிமிடங்களில் அதிலிருந்த 50 ஆயிரம் ரூபாய் வேறு ஒரு வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டது.