தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

ரயிலில் சேட்டை செய்த சிஆர்பிஎஃப் வீரர் கைது - தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு

ஓடும் ரயிலில் குடிபோதையில் பயணிகளை ஆபாசமாக திட்டி, தொல்லை கொடுத்த சிஆர்பிஎப் வீரரை எழும்பூர் ரயில்வே காவல் துறையினர் கைது செய்தனர்.

ரயிலில் சேட்டை செய்த சிஆர்பிஎஃப் வீரர் கைது
ரயிலில் சேட்டை செய்த சிஆர்பிஎஃப் வீரர் கைது

By

Published : Apr 19, 2022, 11:46 AM IST

சென்னை: கன்னியாகுமரி குழித்துறையில் இருந்து குருவாயூர் விரைவு ரயிலில் நேற்று முன்தினம் (ஏப். 17) பயணம் செய்த நபர் ஒருவர் குடிபோதையில் பயணிகளை ஆபாசமாக திட்டி இடையூறு ஏற்படுத்தி வந்துள்ளார்.

இது தொடர்பாக சக பயணி ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த நபரின் புகைப்படத்தை பதிவிட்டு ரயில்வே காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கும்படி பதிவிட்டு இருந்தார். இதனை அறிந்த, தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு, இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு ரயில்வே காவல் துறைக்கு உத்தரவிட்டார்.

அதன்பேரில், குருவாயூர் விரைவு ரயில், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்ததும் எழும்பூர் ரயில்வே காவலர்கள் அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவரின் பெயர் விபின் (33) என்பதும், மத்திய தொழிற்பாதுகாப்பு படையில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது.

மேலும், இவர் தனது விடுமுறையை முடித்துவிட்டு பணிக்கு திரும்பி செல்வதற்காக ரயிலில் S10 பெட்டியில் பயணம் செய்ததும் தெரியவந்தது. சிஆர்பிஎஃப் வீரர் கைது செய்யப்பட்டது குறித்து ரயில்வே காவல்துறை டிஐஜி அபிஷேக் தீக்சித், தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ரயில்வே தொடர்பான புகார்களுக்கு எந்த நேரத்திலும் ரயில்வே காவல் துறையின் 9962500500 என்ற எண்ணை தொடர்புக்கொண்டு புகார் அளிக்கலாம் எனவும் ரயில்வே டிஐஜி அபிஷேக் தீக்சித் அறிவுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: விழுப்புரம் உணவகத்தில் தகராறில் ஈடுபட்ட திருநங்கைகள்- சிசிடிவி காட்சி!

ABOUT THE AUTHOR

...view details