தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

ஹெலிகாப்டர் சகோதரர்களை சிறையில் அடைக்க உத்தரவு - crime news

கும்பகோணத்தில் நிதி நிறுவனம், பால் பண்ணை உள்ளிட்டவற்றை நடத்தி பொது மக்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாகக் கைது செய்யப்பட்ட ஹெலிகாப்டர் சகோதரர்களை, வரும் 19ஆம் தேதி வரை சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஹெலிகாப்டர் சகோதரர்கள்
ஹெலிகாப்டர் சகோதரர்கள்

By

Published : Aug 6, 2021, 5:27 PM IST

தஞ்சாவூர்: கும்பகோணத்தைச் சேர்ந்த எம்.ஆர்.கணேஷ், எம்.ஆர்.சுவாமிநாதன் இருவரும் சகோதரர்கள் ஆவர். அந்தப் பகுதி பொது மக்களால் 'ஹெலிகாப்டர் சகோதரர்கள்' என இவர்கள் அழைக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் இவர்கள் நிதி நிறுவனம், பால் பண்ணை உள்ளிட்டவற்றை நடத்தி, பொது மக்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஹெலிகாப்டர் சகோதரர்கள் தொடர்பான காணொலி

பண்ணை வீட்டில் பதுங்கல்

இதனையடுத்து ஹெலிகாப்டர் சகோதரர்கள் மீது நிதி மோசடி உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர். இதற்கிடையே அவர்களின் கணக்காளர் ஸ்ரீகாந்தன், மீரா, ஸ்ரீதர், வெங்கடேசன், அகிலா ஆகிய ஐந்து பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

மேலும் அவர்களது வீடுகளில் இருந்து 12 சொகுசு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன. தலைமறைவாக இருந்த ஹெலிகாப்டர் சகோதரர்களை பிடிக்க மூன்று தனிப்படை காவல் துறையினர், இருவரையும் தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று (ஆக.05) புதுக்கோட்டை மாவட்டம், வேந்தன்பட்டியில் உள்ள பண்ணை வீட்டில் ஹெலிகாப்டர் சகோதரர்கள் பதுங்கியிருப்பதாக காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினர், இருவரையும் கைது செய்து தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர்.

முக்கிய ஆவணங்கள் கைப்பற்றல்

விசாரணைக்கு பின்னர், இருவரும் இன்று (ஆக.06) கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதனையடுத்து ஹெலிகாப்டர் சகோதரர்கள் இருவரையும், வருகின்ற 19ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இருவரிடமிருந்தும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:பெண்களை பாலியல் வன்புணர்வு செய்யும் பிரபல கொள்ளையன் கைது

ABOUT THE AUTHOR

...view details