சென்னை: திருமங்கலம் வணிக வளாகம் அருகே போக்குவரத்துக் காவலர் ஒருவர் வாகனத் தணிக்கைப் பணியில் இருக்கும்போது, லாரிகளை மடக்கி லஞ்சம் பெறுவதை, வாகன ஓட்டி ஒருவர் செல்போனில் படம்பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
இந்த காணொலி குறித்து உயர் அலுவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் திருமங்கலம் போக்குவரத்து காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரியக்கூடிய சீனிவாசன் என்பது தெரியவந்தது.