சென்னை: மயிலாப்பூர் அருண்டேல் தெருவில் தோமஸ் என்பவர் மளிகைக் கடை நடத்தி வருகிறார். நேற்றிரவு (பிப்.4) வியாபாரத்தை முடித்து கடையை மூடி வீட்டிற்குச் சென்றுள்ளார். வழக்கம் போல இன்று அதிகாலை கடையைத் திறக்க வரும்போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, கடையிலிருந்து ரூ.6000 பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக மயிலாப்பூர் காவல் நிலையத்தில் சம்பவம் குறித்துப் புகாரளித்துள்ளார். புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
கடைகளை உடைத்து தொடர் திருட்டு: சுமார் ஒரு லட்சம் களவு! - chennai mylapore shop theft
சென்னை மயிலாப்பூரில் அடுத்தடுத்து கடைகளின் பூட்டுக்களை உடைத்து, சுமார் ஒரு லட்சம் ரூபாய் வரை திருடப்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்டவர்களை, கண்காணிப்புப் படக்கருவிப் பதிவுகளின் உதவியுடன் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
விசாரணையில் இதேபோல அடுத்தடுத்த தெருவில் உள்ள மூன்று கடைகளில் அடையாளம் தெரியாத கொள்ளையர்கள் கைவரிசை காட்டியிருப்பது தெரிய வந்தது. குறிப்பாக முண்டகன்னியம்மன் கோயில் தெருவில் சின்னதுரை என்பவரின் கடையிலிருந்து 96 ஆயிரம் ரூபாயும், மார்டின் என்பவரின் கடையிலிருந்து 2500 ரூபாய் பணமும் கொள்ளையடித்துச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
இவர்கள் ஏற்கெனவே ஜனவரி மாதம் 18ஆம் தேதி, இதே கடைகளில் கைவரிசை காட்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து மயிலாப்பூர் காவல் துறையினர் அங்குள்ள கண்காணிப்புப் படக்கருவிகளின் பதிவுகளைக் கொண்டு கொள்ளையர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.