சென்னை: பட்டினம்பாக்கம் சீனிவாசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ்வரி(27). இவருக்கு திருமணமாகி கபில்தேவ் என்ற கணவரும், கவிஸ்ரீ(11) சாய்விகாஸ்(5) என இரு பிள்ளைகள் உள்ளனர்.
முன்னாள் தடகள வீராங்கனையான விக்னேஷ்வரிக்கும் அவரது கணவருக்கும் கடந்த ஓராண்டு முன்பு கருத்துவேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தது வாழ்ந்து வந்தனர். குடும்பநல நீதிமன்றத்தில் இவர்களது விவாகரத்து தொடர்பான வழக்கு நடைப்பெற்று வருகிறது.
இதனையடுத்து விக்னேஷ்வரிக்கும் நீலாங்கரை காவல் நிலையத்தில் குற்றப்பிரிவில் தலைமை காவலராக பணியாற்றி வரும் முகிலன் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இருவரும் ஒரே வீட்டில் கணவன், மனைவி போல் வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில் நேற்றிரவு (அக்டோபர் 24) விக்னேஷ்வரி வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடனே முகிலன் 108 அவசர ஊர்திக்கு தகவல் அளித்ததன் பேரில், அங்கு வந்த அவசர ஊர்தி ஊழியர் விக்னேஷ்வரியை பரிசோதித்து அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பின்னர், காவலர் முகிலன் இது குறித்து பட்டினப்பாக்கம் காவல் துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில், அங்கு சென்ற காவல் துறையினர் விக்னேஷ்வரி உடலைக் கைபற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.