தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த உதவி ஆய்வாளரின் மகன் உட்பட 8 மாணவர்கள் கைது!

சென்னை: மதுரவாயல் புலியம்பெடு பகுதியில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த உதவி ஆய்வாளரின் மகன் உட்பட, 8 மாணவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்கள்
கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்கள்

By

Published : Feb 25, 2021, 8:05 AM IST

சென்னை மதுரவாயல் புலியம்பெடு பகுதியில், வீட்டில் மறைத்து வைத்து கஞ்சா விற்பனை செய்து வருவதாக, அம்பத்தூர் துணை ஆணையரின் தனிப்படை காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து அப்பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சோதனை நடத்திய காவல்துறையினர், அங்கு கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர். இதுதொடர்பாக மாணவர்கள் 8 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 18 கிலோ கஞ்சா, இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள ஒருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர உதவி ஆய்வாளவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: உயர் ரக மதுபானங்களை கொள்ளையடிக்க முயற்சி - கொள்ளையர்களுக்கு வலைவீச்சு!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details