சென்னை: ஓய்வுபெற்ற காவல் உயர் அலுவலரின் மனைவியிடம் அடையாளம் தெரியாத நபர்கள் செயின் பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
அரும்பாக்கம் ஜானகி ராமன் காலணியைச் சேர்ந்தவர் சுதாகர் (61). இவர், காவல்துறையில் உதவி ஆணையராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
இந்நிலையில், சுதாகரின் மனைவியான சாந்தி, நேற்று (செப். 16) காலை நியாய விலை கடைக்கு செல்ல, அரும்பாக்கம் காந்தி தெரு ஜகனாதன் நகர் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.