சென்னை: அண்ணா நகரில் நடை பயிற்சி மேற்கொண்ட 62 வயது மூதாட்டியிடம் 7 பவுன் தாலி செயின் பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னை அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் விசாலாட்சி (62). இவர் நேற்று அவரின் வீட்டின் அருகே நடை பயிற்சி மேற்கொண்டிருந்தார். இதை நோட்டமிட்ட 2 அடையாளம் தெரியாத நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து மூதாட்டி விசாலாட்சியை இடித்து கீழே தள்ளியுள்ளனர்.