கள்ளக்குறிச்சி:உளுந்தூர்பேட்டை அன்னை சத்யா தெருவில் வசித்து வருபவர் ரங்கநாதன். இவரது வீட்டில் நள்ளிரவில் புகுந்த மர்ம நபர் ஒருவர் 20,000 மதிப்புள்ள இரண்டு செல்போன்கள் மற்றும் ரொக்கப் பணம் 10 ஆயிரம் ரூபாயை திருடி சென்றுள்ளார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து பக்கத்து வீட்டில் வசித்து வரும் வழக்கறிஞர் ஆனந்தன் என்பவரின் வீட்டில் உள்ள சிசிடிவியில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, அவரது வீட்டிலும் நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் அங்கு இங்குமாக திரிந்து திருடில் ஈடுபட்டுள்ளது பதிவாகியிருந்தது.