தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை மகன் காவல் நிலைய விசாரணையில் கொல்லப்பட்ட வழக்கில், சிபிஐ அலுவலர்கள் திடீரென விசாரணையில் இறங்கியுள்ளனர்.
தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் உடன் ஒரே சிறையில் தங்கியிருந்த பேய்க்குளம் ராஜாசிங்கிடம் 2 பேர் கொண்ட சிபிஐ அலுவலர்கள் விசாரணை நடத்தியுள்ளனர். ஒரு மணி நேரம் இந்த விசாரணை நீண்டுள்ளது. இவ்வழக்கு விசாரணை முடிவுற்று மதுரை நீதிமன்றத்தில் வழக்கு நடந்துவரும் நிலையில், சிபிஐ அலுவலர்கள் திடீரென விசாரணை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விசாரணையின்போது ராஜாசிங்கிடம், ஜெயராஜ் பென்னிக்ஸ் சிறைக்கு உள்ளே வரும்போது எந்த நிலையிலிருந்தார்கள்? அவர்கள் உங்களிடம் என்னென்ன பேசினார்கள்? அவர்களின் காயம் குறித்த தகவல்கள் என்ன? என்பது போன்ற கேள்விகள் கேட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கரோனா முடக்கத்தின்போது கடையை அதிக நேரம் திறந்துவைத்திருந்ததாகக் கைதுசெய்யப்பட்ட தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் காவல் துறையினரால் கொலைசெய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நடந்துவருவது குறிப்பிடத்தக்கது.
சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை குறித்து கூடுதல் தகவல்களை அறிந்துகொள்ளுங்கள்