தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

யாஷிகா ஆனந்த் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு! - actress yashika anand

பிக்பாஸ் புகழ் நடிகை யாஷிகா ஆனந்த் மீது காவல் துறையினர் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

யாஷிகா
யாஷிகா

By

Published : Jul 25, 2021, 5:51 PM IST

Updated : Jul 26, 2021, 12:48 AM IST

செங்கல்பட்டு: அதிகாலையில் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் யாஷிகா ஆனந்த் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த், தனது தோழி வள்ளி ஷெட்டி பவானி (28) மற்றும் இரு ஆண் நண்பர்களுடன், நள்ளிரவு, புதுசேரியில் இருந்து சென்னைக்கு, காரில் வந்து கொண்டிருந்தார். மாமல்லபுரம் அடுத்த சூலேரிக்காடு பகுதியில், இவர்கள் வந்த கார் சாலையின் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், யாஷிகா ஆனந்த்தின் தோழி வள்ளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். யாஷிகா ஆனந்த் மற்றும் இரு நண்பர்கள், படுகாயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், விபத்து குறித்து மாமல்லபுரம் காவல் ஆய்வாளர் நடராஜன், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். முதற்கட்ட விசாரணையில், யாஷிகா ஆனந்த் காரை ஓட்டி வந்தது தெரியவந்துள்ளது. இதனால், யாஷிகா ஆனந்த் மீது 304ஏ, 337, 279 ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Last Updated : Jul 26, 2021, 12:48 AM IST

ABOUT THE AUTHOR

...view details