தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

கோயம்பேடு கார் தீ விபத்து- சிகிச்சை பலனின்றி ஓட்டுநரும் உயிரிழப்பு! - கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை

கோயம்பேடு மேம்பாலத்தில் கார் தீப்பற்றியதில் பின் இருக்கையில் இருந்தவர் சம்பவ இடத்திலே உயிரிழந்த நிலையில், காரின் ஓட்டுநரும் சிகிச்சை பலனின்றி நேற்று (ஜூலை 2) உயிரிழந்தார்.

car driver death
car driver death

By

Published : Jul 3, 2021, 10:50 AM IST

சென்னை: பூந்தமல்லி நெடுஞ்சாலையை இணைக்கக்கூடிய கோயம்பேடு மேம்பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த கார் ஒன்று, கடந்த 28ஆம் தேதி திடீரென தீப்பிடித்து எரிந்தது.

இந்தக் காரில் பயணித்த வேலப்பன் சாவடியை சேர்ந்த அர்ஜுனன் (48) என்பவர், சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார்.

இந்நிலையில், கார் ஓட்டுநரான மாங்காடு பகுதியை சேர்ந்த சுனில்குமார், பலத்த தீக்காயங்களுடன் காரில் இருந்து தப்பித்தார். அவருக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இது பற்றி கோயம்பேடு காவலர்களிடம், “வேலப்பன் சாவடியில் அர்ஜுனனை ஏற்றி கொண்டு சூளைமேடு பகுதிக்கு சென்ற போது கோயம்பேட்டில் கார் எரிந்தது” என்று ஓட்டுநர் வாக்குமூலம் அளித்தார்.

இந்த நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஓட்டுநர் சுனில்குமார் நேற்று (ஜூலை 2) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையும் படிங்க: நண்பரின் காதை கடித்து துப்பியவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details