ராணிப்பேட்டை: கோவிந்தவாரி அகரம் பகுதி நெடுஞ்சாலையில் அரக்கோணத்திலிருந்து காஞ்சிபுரம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று, அதே பாதையில் முன் சென்றுகொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது மோதியது.
வயலில் பாய்ந்த கார், பைக்: ஒருவர் படுகாயம் - ranipettai news
கார், இருசக்கர வாகனம் ஆகியவை வயலுக்குள் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்த நபருக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதில் இருசக்கர வாகனமும், காரும் சேர்ந்து அருகே இருந்த வயல் வெளியில் கவிழ்ந்து விழுந்தது. இந்தச் சம்பவத்தில் இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்த நபருக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் காயமுற்றவரை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.
கார் ஓட்டுநர் காரை அங்கேயே விட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார். இச்சம்பவம் காஞ்சிபுரம் மாவட்ட காவல் எல்லைக்குள்பட்டு இருப்பதால், காஞ்சிபுரம் கிராமிய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.