சென்னை:மேட்டூரைச் சேர்ந்த நவீன், ராஜஹாரீஸ், திருச்சியைச் சேர்ந்த அஜய், புதுக்கோட்டையைச் சேர்ந்த ராகுல், சென்னையைச் சேர்ந்த அரவிந்த் சங்கர். இவர்கள் துரைப்பாக்கம் இந்துஸ்தான் பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பை முடித்தவர்கள்.நாளை (செப்.6) நடைபெற உள்ள நேர்காணல் (Interview) ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்திருந்தனர்.
நண்பர்களுடன் தி.நகரில் பொருள்களை வாங்கிவிட்டு இரவு 12 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். உடனிருந்த நண்பர்களிடம், வண்டலூர் வரை ஒரு ரவுண்ட் சென்று வருவதாகக் கூறிவிட்டு, இளைஞர்கள் 5 பேரும் அங்கிருந்து காரில் புறப்பட்டுள்ளனர்.
5 பேர் உயிரிழப்பு
சொகுசு காரை மேட்டூரை சேர்ந்த நவீன் என்பவர் ஓட்டியுள்ளார். தாம்பரத்திலிருந்து வண்டலூர் நோக்கி சென்று கொண்டிருந்த போது,பெருங்களத்தூர் தனியார் ஐடி நிறுவனத்தின் அருகே, கார் நிலைதடுமாறி அங்கு இரும்பு கம்பிகளை ஏற்றி வைக்கப்பட்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.