தஞ்சாவூர் :தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறை அடுத்த கல்யாணபுரத்தை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் மணிமாறன் (43). இவர் பொன்னாவரை சுடுகாடு அருகே கஞ்சா விற்பனை செய்து கொண்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் திருவையாறு காவல் ஆய்வாளர் செந்தில்குமார், உதவி ஆய்வாளர் (பொ) ஜம்புலிங்கம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மணிமாறனை பிடித்து, அவர் வைத்திருந்த 1 கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அவரை திருவையாறு காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
திருவையாறில் கஞ்சா விற்பனை செய்தவர் கைது! - தஞ்சாவூர் அண்மை செய்திகள்
திருவையாறில் கஞ்சா விற்பனை செய்தவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடமிருந்து ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கஞ்சா விற்பனை செய்தவர் கைது