சென்னை:சின்மயா நகர் நெற்குன்றம் பாதை ஆற்றுப் பாலம் அருகே பிளாஸ்டிக் கவரில் சுருட்டப்பட்ட நிலையில் ஆண் உடல் கிடப்பதாக இன்று(செப்.03) விருகம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் போலீசார், சம்பவயிடத்திற்கு விரைந்து உடலமை மீட்டு உடற்கூராய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன்பின் சந்தேக மரணம் என்று வழக்குபதிவு செய்து, அவரது புகைப்படங்களை அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி விசாரணையை தொடங்கினர். அப்போது ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் இவர் காணாமல் போனதாக புகார் ஒன்று பதிவானது தெரியவந்தது. இதையடுத்து அந்த புகாரை அளித்த நபரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அந்த விசாரணையில் உயிரிழந்தது அவரது தந்தை பாஸ்கரன்(62). ஆதம்பாக்கம் ராமகிருஷ்ணன் புரத்தை சேர்ந்தவர். கான்கிரீட் மிக்ஸிங் தொழில் செய்து வரும் நிலையில் நேற்று மாலை வழக்கம் போல வீட்டிலிருந்து கிளம்பி உள்ளார். இரவு முழுவதும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த பாஸ்கரனின் மகன் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனிடையே பாஸ்கரனின் ஏடிஎம் கார்டிலிருந்து இரண்டு நாள்களாக லட்சக்கணக்கில் பணம் எடுக்கப்பட்டுள்ளது. அவரது கார் கார் விருகம்பாக்கம் நடேசன் நகரில் இருந்துள்ளது என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் நடந்த பகுதியிலிருந்த சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க:மத்திய பிரதேசத்தில் வாட்ச்மேன்களை கொல்லும் சைக்கோ கொலையாளி..