தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

இளைஞரை படுகொலை செய்த கொலையாளிகளை போலீஸார் தேடி வருகின்றனர்! - குமாரசேரி காமேஷ்

குமாரசேரி கிராமத்தில் வசித்து வந்த இளைஞர் காமோஷ், தனது இருசக்கர வாகனத்தில் வெளியே சென்று வீடு திரும்புகையில், அடையாளம் தெரியாத நபர்கள் அவரை மறித்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளனர்.

குமாரசேரி காமேஷ் கொலை வழக்கு
குமாரசேரி காமேஷ் கொலை வழக்கு

By

Published : May 19, 2021, 11:30 AM IST

திருவள்ளூர்: இளைஞர் ஒருவரை அடையாளம் தெரியாத நபர்கள் படுகொலை செய்த சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கடம்பத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட குமாரசேரி கிராமத்தைச் சேர்ந்தவர் புகழேந்தி. இவரது மகன் காமேஷ் (33) நேற்றிரவு (மே 18) கரோனா ஊரடங்கையும் பொருட்படுத்தாமல் வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார்.

இவ்வேளையில், காமேஷ் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, புதிய இருளஞ்சேரி ஆலமரம் அருகே, இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் அவரை வழிமறித்துள்ளனர். சற்றும் எதிர்பாராத வேளையில், அவர்கள் மறைத்து வைத்த ஆயுதங்களைக் கொண்டு காமேஷை சரமாரியாக வெட்டியுள்ளனர்.

இதில் காமோஷ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துள்ளார். தற்போது கரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால், கொலையாளிகள் தங்களின் திட்டத்தினை எளிதாக நிறைவேற்றியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த திருவள்ளூர் காவல் கண்காணிப்பாளர் துரைப்பாண்டியன் தலைமையில் மப்பேடு காவல் நிலைய காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காவல் துறையினர் தொடர்ந்து கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details