சென்னை: குரோம்பேட்டை அடுத்த ஐஸ்வர்யா நகரை சேர்ந்தவர் ஜெயந்தி (40). இவருடைய கணவர் வீட்டிலேயே டைலரிங் கடை நடத்தி வருகிறார். கடந்த 16 ஆம் தேதி ஜெயந்தி வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்தாருடன் உளுந்தூர்பேட்டையில் சுபநிகழ்ச்சிக்காக சென்று விட்டு இன்று அதிகாலை வீடு திரும்பினார்.
அப்போது 50 வயது மதிக்கத்தக்க நபர் கையில் கூர்மையான ஆயுதத்துடன் வீட்டின் மதில் சுவர் மீது ஏறி குதித்தார். இதனைக் கண்ட ஜெயந்தி கூச்சலிட்டதால் அந்த நபரை பிடித்த அக்கம்பக்கத்தினர் தர்ம அடி கொடுத்து சிட்லப்பாக்கம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
பின்னர் ஜெயந்தி உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைக்கபட்டிருந்த ஆறு சவரன் தங்க நகைகள், இருபத்தைந்தாயிரம் ரொக்க பணம், மற்றும் வெள்ளி பொருட்கள் திருடப்பட்டது தெரியவந்தது. இது சம்பந்தமாக சிட்லப்பாக்கம் ஆய்வாளர் மகுடீஸ்வரியிடம் அளித்த புகாரின் பேரில் நபரிடம் விசாரித்ததில் திருடிய வெள்ளி பொருட்கள் மட்டும் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து தங்க நகைகள் மற்றும் பணம் எங்கே போனது என நபரிடம் விசாரனை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க:தோண்ட தோண்ட சுவர் முழுவதும் மனித எலும்புக்கூடுகள்.. ஆட்டோ சங்கர் சீரியல் கில்லராக உருமாறியது எப்படி?