தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

பாகிஸ்தான் படகை மடக்கிய இந்திய கடலோரக் காவல் படை: 30 கிலோ ஹெராயின் பறிமுதல் - இந்தியா கடலோர காவல் படை

அகமதாபாத்: ஜாகாவ் கடற்கரை அருகே பாகிஸ்தான் மீன்பிடி படகிலிருந்து 30 கிலோ ஹெராயினை கடலோரக் காவல் படையும், ஏ.டி.எஸ். படையும் பறிமுதல்செய்து விசாரித்துவருகின்றனர்.

Kutch
குஜராத்

By

Published : Apr 15, 2021, 11:49 AM IST

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தின் ஜாகாவ் கடற்கரைப் பகுதியில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

தகவலின்பேரில், அப்பகுதியில் இந்திய கடலோரக் காவல் படையும், குஜராத் பயங்கரவாத தடுப்புப் படையும் (ஏடிஎஸ்) இணைந்து தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

அப்போது, அங்குச் சுற்றித்திரிந்த பாகிஸ்தான் மீன்பிடி படகைச் சுற்றிவளைத்து சோதனை நடத்தினர். அதில் சுமார் 30 கிலோ ஹெராயின் இருப்பது தெரியவந்தது. படகிலிருந்த பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த எட்டு நபர்களைக் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க:வீட்டின் பூட்டை உடைத்து 11 சவரன் நகை, ரூ.7 லட்சம் கொள்ளை

ABOUT THE AUTHOR

...view details