தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

குழந்தையை தலை துண்டித்து, தற்கொலை செய்துகொண்ட தாய்!

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் குழந்தையின் தலையை துண்டித்து, தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

Breaking News

By

Published : Feb 26, 2021, 10:51 PM IST

உத்தரப் பிரதேச புலந்த்ஷஹர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்தவர் ஜிதேந்திரி (23). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. இவரது கணவர் ராஜஸ்தானில் டெய்லராக பணிபுரிகிறார். இந்தத் தம்பதிக்கு ஒரு வயது ஆண் குழந்தை இருந்தது.

இந்நிலையில் நேற்று (பிப். 25) ஜிதேந்திரி தனது மகனின் தலையை துண்டித்து, வீட்டின் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் அவரை மீட்ட உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே ஜிதேந்திரி உயிரிழந்தார்.

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ்குமார் சிங் கூறுகையில், “இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்” என்றார்.

இதையும் படிங்க...2.5 கோடி மோசடி செய்த தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் கைது!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details