தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

கிணற்றில் குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொள்ள குதித்த பெண் பத்திரமாக மீட்பு! - தற்கொலை

சென்னை ஆவடி அருகே கணவர் இறந்த துக்கத்தால் பிள்ளைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற தாய் , இரு குழந்தைகளை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.

avadi lady suicide attempt
avadi lady suicide attempt

By

Published : Sep 30, 2021, 6:53 AM IST

சென்னை: ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் ஜாக் நகரை சேர்ந்த முனிசாமி (40) தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நிலையில், ஒரு வாரத்திற்கு முன் ரயில் விபத்தில் பரிதாபமாக இறந்தார்.

இவரது மனைவி ஐஸ்வர்யா (34), இரண்டு மகன்களுடன் வசித்து வந்தார். கணவர் மறைவிற்கு பிறகு ஐஸ்வர்யா, கணவர் முனிசாமியை நினைத்து அழுது புலம்பியபடியே இருந்துள்ளார்.

இரண்டு குழந்தைகளை எப்படி காப்பாற்றுவது என கடும் துயரத்தில் இருந்த நிலையில், நேற்று மதியம் ஐஸ்வர்யா, தனது 2 குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறி திருமுல்லைவாயில் பச்சமையம்மன் கோயில் வளாகத்தில் உள்ள 20 அடி ஆழ கிணற்றில் 2 மகன்களுடன் குதித்தார்.

இதை பார்த்த அங்கிருந்த பக்தர்கள் அதிர்ச்சியடைந்து, கிணற்றில் இறங்கி, குழந்தைகளை மீட்டனர். ஆனால் அவர்களால், ஐஸ்வர்யாவை
மீட்க முடியவில்லை.

தகவலறிந்த ஆவடி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்க்கு சென்று, கிணற்றில் இறங்கி ஐஸ்வர்யாவை உயிருடன் மீட்டனர். பின்னர் 3 பேரையும், அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதுகுறித்து திருமுல்லைவாயில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details