தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

உடுமலையில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு: காரில் வந்த கும்பலுக்கு வலைவீச்சு - Murder attempt for youth in Udumalai

திருப்பூர்: உடுமலையில் காரில் வந்த அடையாளம் தெரியாத கும்பல் செல்போன் கடை ஊழியரை அரிவாளால் வெட்டிய சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

theft
theft

By

Published : Feb 6, 2021, 5:44 PM IST

திருப்பூர் மாவட்டம் உடுமலை, ராமசாமி நகரைச் சேர்ந்த மனோகார்த்தி்க் (31), ஓனாக்கல்லூரைச் சேர்ந்த பவித்ரா (23) ஆகியோருக்கு மூன்று மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. மனோகார்த்திக் தளி ரோட்டிலுள்ள, செல்போன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார்.

நேற்று முன்தினம் (பிப். 4) இரவு, 9 .10 மணிக்கு கடையை பூட்டி விட்டு, நண்பர் மணிபாரதியுடன், செல்போன் கடை விற்பனை பணத்தை கொடுக்க, பசுபதி வீதிக்கு சென்றார். அப்போது, காரில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல், மனோகார்த்திக்கை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். அவர் நிலைகுலைந்து சரிந்ததும், அந்தக் கும்பல் தப்பியோடியது.

தொடர்ந்து அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு, உடுமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உடுமலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, காரில் வந்த கும்பல் யார், எதற்காக அரிவாளால் வெட்டினார்கள் என விசாரித்து வருகின்றனர்.

சம்பவம் நடந்த பகுதி மற்றும் பிரதான ரோடுகளில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை, காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க:அனைத்து பந்துகளிலும் சிக்ஸர் அடிக்கும் முதலமைச்சர் - அமைச்சர் செல்லூர் ராஜூ

ABOUT THE AUTHOR

...view details