திருநெல்வேலி:2019ஆம் ஆண்டு அம்பாசமுத்திரம் பொட்டல் பகுதியில், கேரளா மாநிலத்தை சேர்ந்த மலங்கரா கத்தோலிக்க திருச்சபைக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தை கோட்டையத்தை சேர்ந்த மனுவேல் ஜார்ஜ் என்பவர் குத்தகைக்கு எடுத்து, அரசு ஒப்புதலுடன் குவாரி அமைத்தார்.
அதில், எம்-சாண்ட் மணல் தயாரித்து கேரளா மாநிலத்திற்கு அனுப்பி வந்தார். இதனிடையே 2020ஆம் ஆண்டு, எம்-சாண்ட் என்னும் பெயரில் ஆற்று மணலை கேரளாவுக்கு கடத்தியதாக ஜார்ஜ் மீது கல்லிடைக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அதனடிப்படையில் கைது செய்யப்பட்டார். அதுதொடர்பான வழக்கில், சட்டத்துக்கு புறம்பாக 27 ஆயிரத்து 776 கியூபிக் மீட்டர் மணலை கொள்ளை அடித்ததாக கூறி, சேரன்மகாதேவி சார்-ஆட்சியர் குவாரிக்கு 9 கோடியே 56 லட்ச ரூபாய் அபராதம் விதித்தார்.