தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

உயிரிழந்த மூதாட்டிக்கு 2வது டோஸ் கரோனா தடுப்பூசி - குறுஞ்செய்தி வந்ததால் அதிர்ச்சி - உயிரிழந்த மூதாட்டிக்கு 2வது டோஸ் கரோனா தடுப்பூசி

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு உயிரிழந்த மூதாட்டிக்கு 2-வது டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்தியதாக குறுஞ்செய்தி வந்துள்ளது.

coimbatore district corona infection
கரோனா தடுப்பூசி சான்றிதழ்

By

Published : Feb 1, 2022, 1:09 PM IST

கோயம்புத்தூர்: தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, கோயம்புத்தூர் மாவட்டத்தில் 98 விழுக்காடு முதல் தவணையும், 83 விழுக்காடு இரண்டாவது தவணையும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணிகளும் நடைபெறுகிறது.

மேலும், தடுப்பூசி செலுத்தும் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தியதற்கான குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு வருகிறது. இதன் மூலம் கோவின் இணையதளம் பக்கத்திற்கு சென்று கரோனா தடுப்பூசி செலுத்திய சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்நிலையில், கோயம்புத்தூர் மாநகராட்சி தெலுங்குபாளையத்தை சேர்ந்த 67 வயது மூதாட்டி ஒருவர் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்தாண்டு ஜூலை 27-ம் தேதி முதல் தவணை தடுப்பூசியை செலுத்தி கொண்டார். பின்னர் உடல் நலக்குறைவு காரணமாக கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 9-ம் தேதி அவர் உயிரிழந்தார்.

கரோனா தடுப்பூசி சான்றிதழ்

பின்னர், சமீபத்தில் மூதாட்டி ஏற்கனவே அளித்த செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்ட மாநகராட்சி ஊழியர்கள் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்த வேண்டிய தேதி வந்துவிட்டதாகவும், உடனடியாக தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர். அப்போது, மூதாட்டி இறந்து விட்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து கடந்தாண்டு டிசம்பர் 29ஆம் தேதி இறந்த மூதாட்டிக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசியை தெலுங்குபாளையம் நகர்புற ஆரம்ப சுகாதாரநிலையத்தில் செலுத்தியதாக அவர் பதிவு செய்த செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனை பார்த்த உறவினர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மேலும், கோவின் இணையதளத்தில் மூதாட்டி இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த தகவல் மூதாட்டியின் உறவினர்கள் மட்டுமல்லாமல் அப்பகுதி மக்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: மாணவர்கள் கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் - மா.சுப்பிரமணியன்

ABOUT THE AUTHOR

...view details