தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

நீதிமன்றத்தில் பிரபல ரவுடியை கொல்ல முயற்சி; உதவி ஆணையர் தலைமையில் கூடுதல் பாதுகாப்பு

சென்னையில் பிரபல ரவுடியை கொல்ல முயன்ற சம்பவம் நடந்ததையொட்டி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் உதவி ஆணையர் தலைமையில் கூடுதல் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் பிரபல ரவுடியை கொல்ல முயற்சி; உதவி ஆணையர் தலைமையில் கூடுதல் பாதுகாப்பு
நீதிமன்றத்தில் பிரபல ரவுடியை கொல்ல முயற்சி; உதவி ஆணையர் தலைமையில் கூடுதல் பாதுகாப்பு

By

Published : Sep 6, 2022, 1:52 PM IST

சென்னை: சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பிரபல ரவுடி மதுரை பாலாவை நேற்று வழக்கிற்காக காவலர்கள் அழைத்து வந்த போது ஐந்து பேர் கொண்ட கும்பல் கத்தியுடன் பாய்ந்து கொல்ல முயன்றனர். பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர்கள் உட்பட போலீசார் அவர்களை மடக்கிப் பிடித்தனர்.

இதனால் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் உதவி ஆணையர் தலைமையில் கூடுதல் பாதுகாப்பு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சைதாபேட்டை நீதிமன்றத்திற்கு வழக்கிற்காக வரும் நபர்களின் பெயர், விவரங்கள் உள்ளிட்டவையோடு உடைமைகள் பரிசோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

நீதிமன்றத்தின் இரண்டு நுழைவு வாயில்களிலும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சிறையிலிருந்து வழக்கிற்காக குற்றவாளிகளை அழைத்து வரும் காவல்துறையினரின் வாகனம் காவல் துறையினர் கண்காணிப்பு உள்ள பகுதிகளில் நிறுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:இந்தியாவின் மிகப்பெரிய கார் திருடன் டெல்லியில் கைது

ABOUT THE AUTHOR

...view details