தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

அமமுக பிரமுகர் வெட்டிக் கொலை..! - Ammk pary member murder

மணலூர்பேட்டையில் விவசாய நிலத்தில் வெட்டு காயங்களுடன் அமமுக கட்சி நிர்வாகி உயிரிழந்து கிடந்தார்.

murder case
murder case

By

Published : Jul 13, 2021, 8:03 PM IST

கள்ளக்குறிச்சி: மணலூர்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராமம் ஜி.பி.தாங்கள். இந்த கிராமத்தை சேர்ந்த ஆறுமுகத்தின் மகன் கோவிந்தன் என்பவர் இன்று(ஜூலை.13) காலை தமது விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றுள்ளார்.

நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது உறவினர்கள் அவரை தேடி பார்த்தபோது, கோவிந்தன் தமது விவசாய நிலத்தில் வெட்டுக் காயங்களுடன் உயிரிழந்து கிடந்துள்ளார். உடனே அவரது உறவினர்கள் மணலூர்பேட்டை காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

பின்னர் தகவலின் பேரில் அங்கு வந்த காவல் துறையினர், கோவிந்தனின் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அவர், அமமுக கட்சி நிர்வாகி என்பதால் இந்த வழக்கு குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: வேலை பார்க்க வேண்டாம் எனக் கூறிய தந்தை - மகன் தற்கொலை!

ABOUT THE AUTHOR

...view details