அதிமுக முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, நாமக்கல், ஈரோடு, வேலூர், சேலம், கரூர், திருப்பூர், கோயம்புத்தூர், கர்நாடகா, ஆந்திரா உள்பட 69 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. குறிப்பாக, சென்னையில் மட்டும் 14 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் அதிரடி ரெய்டு - வேலாயுதம்பாளையம்
06:59 December 15
கரூர் அருகே உள்ளே வேலாயுதம்பாளையம் கூலகவுண்டனூர் பகுதியில் வசித்து வரும் முன்னாள் அமைச்சர் தங்கமணியின் உறவினரான வசந்தி சுப்ரமணி என்பவரது வீட்டிலும், கரூர் - கோவை சாலையில் உள்ள ஜெயஸ்ரீ செராமிக் என்ற நிறுவனத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையை தொடங்கியுள்ளனர்.
திமுக ஆட்சிக்கு வந்தபிறகு முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் சோதனை நடப்பது இது ஐந்தாவது முறை. அதன்படி, எம்.ஆர். விஜயபாஸ்கர், எஸ்.பி. வேலுமணி, கே.சி. வீரமணி, சி. விஜயபாஸ்கர் ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், தங்கமணிக்கு சொந்தமான இடங்களில் இன்று (டிசம்பர் 15) சோதனை நடத்தப்பட்டுவருகிறது.