மும்பை: இணையத்தில் ஆபாச படங்கள் பதிவேற்றிய குற்றச்சாட்டின் அடிப்படையில் பிரபல நடிகை கைதுசெய்யப்பட்டார்.
இணையதளத்தில் ஆபாச வீடியோக்களை பதிவேற்றுவதில் பங்கு வகித்ததாக நடிகை கெஹானா வசிஸ்தை குற்றப்பிரிவு காவலர்கள் கைது செய்துள்ளதாக மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அவர் இன்று மும்பையில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று மும்பை போலீசார் தெரிவித்தனர். இந்த வழக்கு தொடர்பாக நடிகை வசிஷ்டுடன் மொத்தம் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக, மும்பை காவல்துறை ஆபாச பட வியாபாரத்தில் ஈடுபட்ட ஒரு கும்பலை கைது செய்தது. இந்தக் கும்பலிடம் நடத்திய விசாரணையில் நடிகை சிக்கியுள்ளார். அதாவது சம்பந்தப்பட்ட ஆபாச படக் கும்பலுக்கு சூத்திரதாரியாக நடிகை செயல்பட்டுவந்துள்ளார். இந்த வழக்கில் ரோயா கான் என்ற யஸ்மீனையும் போலீசார் கைது செய்துள்ளனர். இவர் முன்பு திரைப்படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் படவாய்ப்புக்காக காத்திருந்த சிறுமிகளின் பட்டியலையும் காவலர்கள் பறிமுதல் செய்துள்ளளனர்.