திருவள்ளூர்: ஆரணி இருளர் காலணியில் வசிப்பவர், சின்னமணி. இவர் ஆரணி காவல் நிலையம் அருகே டிஃபன் கடை நடத்தி வருகிறார். மேலும் இவர் கஞ்சா விற்பனை செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
நேற்று இரவு பெரியபாளையம், தண்டுமா நகர் பகுதியினைச்சேர்ந்த சரத் (வயது 21) மற்றும் மாரிமுத்து ஆகியோர் கஞ்சா வாங்குவது தொடர்பாக மோட்டார் சைக்கிளில் சின்னமணி வீட்டிற்கு வந்தனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் சின்ன மணி மறைத்து வைத்திருந்த கத்தியால் சரத் மற்றும் மாரிமுத்துவை வெட்டியதில், சரத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மாரிமுத்து லேசான காயங்களுடன் தப்பியதாக கூறப்படுகிறது.