தேனி:பெரியகுளம் கீழவடகரை ஊராட்சிக்கு உட்பட்ட திருவள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்தவர், கண்ணன் என்ற கண்ணதாசன் (28). நாள்தோறும் கஞ்சா போதையில் அப்பகுதி பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் சாலைகளில் செல்பவர்களிடம் கையில் அரிவாளுடன் மிரட்டி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
கண்ணதாசன் கஞ்சா போதை தலைக்கேறியதும் அரிவாளை கையில் எடுத்துக்கொண்டு அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களையும், கடை உரிமையாளர்களையும் அரிவாளை காட்டி மிரட்டி வருகின்றார். இதனால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரையிலும் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தொடர்ந்து கண்ணதாசன், அந்தப்பகுதியில் அடிக்கடி அரிவாளுடன் நிதானமற்ற நிலையில் போதையில் ரவுடி போன்று வலம் வருவது பொது மக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ளது.