தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

நொடிப் பொழுதில் நிகழ்ந்த சம்பவம் - படிக்கட்டுகளில் விழுந்து திடீரென உயிரிழந்த இளைஞர்! - karnataka news in tamil

நண்பரின் திருமணத்திற்குச் சென்ற இளைஞர் மது அருந்திவிட்டு, காற்று வாங்க அறையை விட்டு வெளியே வந்துள்ளார். திடீரென நிலைகுலைந்த அவர், படிக்கட்டுகளில் சரிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் குறித்துக் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் குறித்த சிசிடிவி பதிவு தற்போது வெளியாகியுள்ளது.

young man dead by falling from the stairs
young man dead by falling from the stairs

By

Published : Feb 21, 2021, 4:50 PM IST

சிக்கபல்லாபுரா (கர்நாடகம்): திடீரென படிக்கட்டுகளில் சுருண்டு விழுந்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்த சிசிடிவி பதிவுகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இறந்தவர் பெயர் ஹரீஷ்(22). இவர் கெளரிபிடானூரு எனும் இடத்தில் நடந்த நண்பரின் திருமண நிகழ்வில் கலந்துகொள்வதற்காகச் சென்றுள்ளார். அங்குத் தனியார் விடுதியில் இளைஞர்களுக்கு மதுபானம் அருந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தந்தை மீது 5 சகோதரிகள் வன்புணர்வு புகார்

நல்ல மதுபோதையை ஏற்றிக்கொண்ட ஹரீஷ், காலை ஐந்து மணியளவில் காற்று வாங்குவதற்காக அறையை விட்டு வெளியே வந்துள்ளார். அங்கு சிறிதுநேரம் நின்றுகொண்டிருந்த அவர், திடீரென நிலைகுலைந்து படிக்கட்டுகளில் சரிந்து விழுந்துள்ளார்.

உடனடியாக அவரை விடுதி நிர்வாகத்தினர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே மரணமடைந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்துக் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இளைஞர் உயிரிழந்தது குறித்த சிசிடிவி பதிவு

மருத்துவமனைக்கு வந்த காவல் துறையினர், இளைஞரின் உடலைக் கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விடுதியின் சிசிடிவி பதிவுகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details