மயிலாடுதுறை: மணல்மேடு சுற்றுவட்டார பகுதியில் ஆத்தூர், மல்லியக்கொல்லை ஆகிய இரு இடங்களில் மட்டும் டாஸ்மாக் மதுபான கடை உள்ளன. இந்நிலையில், மணல்மேடு கடைவீதியில் பொதுமக்கள் அதிகமாக செல்லும் சாலையில் போதை ஆசாமி ஒருவர் நடுரோட்டில் அமர்ந்து மது அருந்தும் வீடியோ வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவில், அதிக விலை கொடுத்து மதுபானம் வாங்கி குடிப்பதாகவும், மணல்மேட்டில் டாஸ்மாக் கடை அமைக்காவிடில், தீக்குளிப்பேன் என்றும் தகாத வார்த்தைகளில் அவர் புலம்பி ஆதங்கப்படுகிறார். சுட்டெரிக்கும் வெயிலில் தார் சாலையில் அமர்ந்திருக்கும் அவர் குடிப்பதற்கு முன்பு தலையில் குளிர்ந்த நீரை ஊற்றிக்கொண்டு, மதுவையும் தீர்த்தம்போல தலையில் நனைத்துக் கொண்டு குடிக்கத் தொடங்கினார்.