தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

வெளிநாட்டில் இருந்து தங்கம் கடத்திவந்த குருவி மீது தாக்குதல்... 5 பேர் கைது... - துபாயில் இருந்து சென்னைக்கு

துபாயில் இருந்து சென்னைக்கு 400 கிராம் தங்கத்தை கடத்தி வந்த குருவியை தாக்கிய திமுக துணை நகர செயலாளர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டில் இருந்து தங்கம் கடத்திவந்த குருவி; திமுக பிரமுகர் உட்பட 5 பேர் கைது
வெளிநாட்டில் இருந்து தங்கம் கடத்திவந்த குருவி; திமுக பிரமுகர் உட்பட 5 பேர் கைது

By

Published : Sep 10, 2022, 7:52 AM IST

சென்னை: திருத்தணியை சேர்ந்த ஆனந்தராஜ், வெளிநாட்டிலிருந்து 30 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்று கொண்டு செப்., 7 ஆம் தேதி துபாயிலிருந்து சென்னை வந்த விமானத்தில் 400 கிராம் தங்கத்தை கடத்தி வந்தார். இந்த தங்கத்தை காரைக்காலை சேர்ந்த நபர்களிடம் ஒப்படைக்காமல், தானே எடுத்துகொள்ளும் எண்ணத்தில் தனது தம்பிகளோடு சேர்ந்து அடையார் கேன்சர் மருத்துவமனை அருகே பிரித்து பார்த்துள்ளனர்.

அப்போது அதில் தங்கம் இல்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று திருவள்ளூர் மாவட்டம் ஆர்கே பேட்டையில் உள்ள ஆனந்தராஜ் வீட்டிற்கு சென்ற ஒரு கும்பல் அவரது குடும்பத்தினரை காரில் கடத்தி சென்னை அரும்பாக்கத்தில் உள்ள சிஎன்சி ரெசிடென்ஸ் என்ற ஹோட்டலில் வைத்து தங்கத்தை கேட்டு மிரட்டியுள்ளது.

இதனைக்கண்ட விடுதி ஊழியர்கல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதனடிப்படையில், காரைக்காலை சேர்ந்த இதயத்துல்லா 40, பாலகன் 29, ஆற்காட்டை சேர்ந்த திமுக துணை நகர செயலாளர் ரவிக்குமார், தினேஷ், நவீன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து பிஎம்டபிள்யூ உள்ளிட்ட சொகுசு காரர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதையும் படிங்க:சென்னை சாலைகளில் தொடரும் பைக் சாகச அட்டூழியம்; பீதியில் பொதுமக்கள்

ABOUT THE AUTHOR

...view details