தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

35 ஆண்டுகளாக ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கண்ணீர் மல்கும் குடும்பம்! - A family has been left out of town for 35 years

குமரி மாவட்டம் , இரணியல்கோணம் பேரூராட்சிக்கு உட்பட்ட கிராமம் ஒன்றில் 35 ஆண்டுகளாக தாங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக பாதிக்கப்பட்ட சிவதாணு பிள்ளை குடும்பத்தினர் வேதனைத் தெரிவிக்கின்றனர்.

family affected in iraniyakonam
ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கண்ணீர் மல்கும் குடும்பம்

By

Published : Jun 24, 2022, 6:11 PM IST

கன்னியாகுமரி:இரணியல் கோணம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 86 வயதான சிவதாணு பிள்ளை மற்றும் அவரது மனைவி மகன் ராமதாஸ் ஆகியோர் வாழ்ந்து வருகின்றனர். 35 ஆண்டுகளுக்கு முன்னதாக இவர்களுடைய பட்டா நிலத்தில் உள்ள வழிபாட்டுத்தலத்தை, ஊர் நிர்வாகத்திற்கு கேட்டபோது கொடுக்க மறுத்ததால், ஊரை விட்டு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக சிவதாணு பிள்ளை குடும்பத்தினர் கூறுகின்றனர்.

ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கண்ணீர் மல்கும் குடும்பம்

ஊரில் உள்ள கிணற்றில் தண்ணீர் எடுக்க முடியாது எனவும்; புதிதாக கட்டி முடித்த வீட்டில் கூட தங்களால் குடியேற முடியவில்லை எனவும் வேதனைத் தெரிவிக்கின்றனர். தங்களுடன் யாராவது பேசினால் அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிப்பு உள்ளிட்ட ஊர்க்கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகவும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கூறினர்.

ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கண்ணீர் மல்கும் குடும்பம்

இது சம்பந்தமாக இரணியல் காவல் நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முதல் முதலமைச்சர் தனிப்பிரிவு வரை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கண்ணீர் மல்க வேதனைத் தெரிவிக்கிறார், பாதிக்கப்பட்ட சிவதாணு பிள்ளையின் மகன் ராமதாஸ்.

இதையும் படிங்க: 'நாங்க போவோம்.. இல்ல பாய விரிச்சி இங்கேயே படுப்போம்..' - அதகளம் செய்த போதை ஆசாமிகள்!

ABOUT THE AUTHOR

...view details