தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

ஆற்றில் குளிக்கச் சென்ற ஆறு வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு! - 6 years old boy dead

விருதுநகர்: சாத்தூர் வைப்பாற்றில் குளிக்கச் சென்ற ஆறு வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

சாத்தூரில் ஆற்றில் குளிக்கச் சென்ற 6 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு
சாத்தூரில் ஆற்றில் குளிக்கச் சென்ற 6 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

By

Published : Jun 18, 2021, 7:09 PM IST

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் காமாட்சி நாயக்கர் தெருவைச் சேர்ந்தவர் பொன்னுப்பாண்டி. இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு திலீபன்(6), அழகன்(13) என்ற இரு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில், மகன்கள் இருவரும், நண்பரான தினேஷ் குமார்(8) அழைத்து சாத்தூரில் உள்ள வைப்பாற்றில் குளிக்க சென்றுள்ளனர். இதில், திலீபன் ஆற்றில் ஆழம் தெரியாமல், நீரில் மூழ்கியுள்ளார். உடனே, சகோதரன் அழகன், தினேஷ்குமார் கூச்சலிட்டுள்ளனர். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஆற்றில் குதித்து நீரில் மூழ்கிய திலீபனின் உடலை மீட்டனர்.

சாத்தூரில் ஆற்றில் குளிக்கச் சென்ற 6 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

தகவலறிந்த, காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சிறுவனின் உடலை கைப்பற்றி சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதையும் படிங்க: கடன் கொடுக்கல் வாங்கல் விவகாரம்: 3 பேருக்கு அரிவாள் வெட்டு

ABOUT THE AUTHOR

...view details