சிங்கப்பூா் மற்றும் துபாயிலிருந்து ஏா் இந்தியா சிறப்பு விமானங்கள் இன்று காலை சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்தன. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறையினா் சோதனையிட்டபோது, சென்னையை சோ்ந்த நசூரல் ஹக் (23) மற்றும் ஆந்திர மாநிலம் கடப்பாவை சோ்ந்த சிவசங்கா் (34) ஆகிய இருவரையும், சந்தேகத்தில் தனியே அழைத்துச் சென்று சோதித்தனர்.
ரூ.30 லட்சம் மதிப்பிலான 600 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல்! - சென்னை பன்னாட்டு விமான நிலையம்
சென்னை: சிங்கப்பூா் மற்றும் துபாய் நாடுகளிலிருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட 600 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு இருவர் கைதாகியுள்ளனர்.
seized
அப்போது அவா்களின் உள்ளாடைகள் மற்றும் துளையிடும் இயந்திரத்தில் மறைத்து கொண்டு வந்த 600 கிராம் தங்க பேஸ்ட், தங்கக்கட்டிகளை அவர்கள் பறிமுதல் செய்தனா். அதன் சா்வதேச மதிப்பு ரூ.30 லட்சம் ஆகும். இதையடுத்து இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதையும் படிங்க: நீதிமன்றத்தில் போலி ஆவணங்களை தாக்கல் செய்த இருவர் கைது