ஹைதராபாத்: போலி ஆவணங்களைப் பயன்படுத்தி கடவுச்சீட்டு பெற்று வந்த மோசடி கும்பலைச் சேர்ந்த 6 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இந்த மோசடியில் ஏதேனும் வங்கதேச கும்பலுக்குத் தொடர்புள்ளதா என்பது குறித்தும் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் ஆறு பேரும், முறையான ஆவணங்கள் இன்றி வருபவர்களுக்கு, போலி ஆவணங்கள் மூலம் கடவுச்சீட்டு பெற்றுத் தந்தது விசாரணையில் உறுதியாகியுள்ளது.