தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

ராஜஸ்தானில் சிறார்கள் மீதான பாலியல் வன்புணர்வு அதிகரிப்பு! - Minor Rape cases in Rajasthan

ராஜஸ்தானில் கடந்த 3 ஆண்டுகளில் சிறார்கள் மீதான பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் அதிகரித்துள்ளன. தகவலின்படி இங்கு 5 ஆயிரத்து 793 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

rape
rape

By

Published : Mar 25, 2022, 7:22 PM IST

ஜெய்ப்பூர் : ராஜஸ்தானில் சிறார்கள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளன. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 5 ஆயிரத்து 793 புகார்கள் பதிவாகியுள்ளன. இந்த வழக்குகளில் தொடர்புடைய 6,628 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 129 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சமூக செயற்பாட்டாளர் விஜய் கோயல் ஈடிவி பாரத்திடம் பேசினார். அப்போது மாநிலத்தில் அதிகரித்து வரும் பாலியல் வன்புணர்வு வழக்குகள் தொடர்பான கேள்விக்கு, “2019 ஜனவரி முதல் 2022 ஜனவரி வரையிலான மூன்று ஆண்டுகளில், 5,793 பலாத்கார வழக்குகள் பதிவாகியுள்ளதாக சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்றார்.

தொடர்ந்து அவர், “ராஜஸ்தானில் ஒவ்வொரு நான்கு மணி நேரத்திற்கும் ஒரு மைனர் பெண் பலாத்காரம் செய்யப்படுகிறாள். மைனர் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக 6,628 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மாநிலத்தில் 56 போக்சோ நீதிமன்றங்கள் இருந்தும் 129 குற்றவாளிகள் மட்டுமே தண்டிக்கப்பட்டுள்ளனர்” என்றார்.

ராஜஸ்தானில் சிறார்கள் மீதான பாலியல் வன்புணர்வு அதிகரிப்பு!

மற்றொரு சமூக செயற்பாட்டாளரான மணிஷா சிங் கூறுகையில், “பாதிக்கப்பட்ட சிறார்களுக்கு சரியான நேரத்தில் நீதி கிடைக்க வேண்டும், குற்றவாளிகள் விரைவில் தண்டிக்கப்பட வேண்டும்," இதற்காக போக்சோ நீதிமன்றங்கள் திறக்கப்பட்டுள்ளன, ஆனால் மாநிலத்தில் 56 போக்சோ நீதிமன்றங்கள் இருந்தும், பாதிப்பாளர்கள் வெளியே சுற்றிதிரிவது கவலைக்குரியது. 129 குற்றவாளிகளுக்கு இதுவரை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மாநிலத்தில் தனி போக்ஸோ நீதிமன்றங்கள் இருந்தும் குற்றவாளிகள் சட்டத்தின்பிடியில் சிக்காமல் உள்ளனர்” என்றார்.

இதையும் படிங்க :பள்ளி கழிவறையில் மாணவி வன்புணர்வு!

ABOUT THE AUTHOR

...view details