தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

தங்கத்தை மறைச்சு வைக்கிற இடமா அது.... அதிர்ந்துபோன அலுவலர்கள் - 2.85 கோடி ரூபாய் மதிப்பிலான 5 ஆயிரத்து 747 கிராம் தங்கம் பறிமுதல்

கோயம்புத்தூர்: விமான நிலையத்தில் மலக்குடலில் மறைத்து கடத்தி வரப்பட்ட 2.85 கோடி ரூபாய் மதிப்பிலான 5 ஆயிரத்து 747 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

gold
gold

By

Published : Feb 11, 2021, 7:54 PM IST

கடந்த ஒன்றாம் தேதி ஷார்ஜாவிலிருந்து ஏர் அரேபியா விமான நிலையம் மூலம் கோயம்புத்தூர் வந்த ஐந்து பயணிகளை சந்தேகத்தின் பேரில் மத்திய வருவாய் புலனாய்வு அலுவலர்கள் சோதனை செய்தனர்.

அதில் ஐந்து பேரும் மலக்குடலில் மறைத்து வைக்கப்பட்ட 6 ஆயிரத்து 318 கிராம் எடைகொண்ட 'பேஸ்ட்' வடிவிலான தங்கம் இருப்பது தெரியவந்தது. இருப்பினும் ஒருவர் பதற்றமாக இருப்பதையறிந்த அலுவலர்கள் அவரிடம் நடத்திய சோதனையில், 324 கிராம் எடைகொண்ட தங்கத்தை 28 கேப்சூல்கள் விழுங்கி கடத்தி வந்தது கண்டறியப்பட்டது.

அதேபோன்று 5 பேரும் மலக்குடலில் மறைத்து வைக்கப்பட்ட 6 ஆயிரத்து 318 கிராம் எடைகொண்ட பேஸ்ட் வடிவிலான தங்கம் இருப்பது தெரியவந்தது. மலக்குடலிலும், விழுங்கப்பட்ட கேப்சூல்கள் மூலம் மொத்தமாக 6 ஆயிரத்து 642.4 கிராம் தங்கத்தை பல்வேறு வழிகளில் பிரித்தெடுத்ததில் 2.85 கோடி ரூபாய் மதிப்பிலான 5 ஆயிரத்து 747 கிராம் தங்கத்தை மத்திய வருவாய் புலனாய்வு அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்

சோதனையில் சிக்கிய தங்கம்

அதனைத் தொடர்ந்து, கோயம்புத்தூர் விமான நிலையத்தில் பிடிபட்ட சிவகங்கை, திருச்சி, சென்னை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 5 பயணிகளையும் கைது செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத திமுக மக்களின் குறைகளை கேட்கிறது - கனிமொழி

ABOUT THE AUTHOR

...view details