தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

4 பேர் குண்டர் சட்டத்தில் கைது! - District Collector Senthilraj

தூத்துக்குடி: ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளரை சரக்கு வாகனம் ஏற்றி கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட முருகவேல் உள்ளிட்ட 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

4 person arrest
4 person arrest

By

Published : Feb 25, 2021, 6:41 AM IST

முருகவேல் மாடசாமி, சின்னதுரை, கந்தசாமி உள்பட நான்கு பேர் மீது குண்டர் சட்டத்தின் நடவடிக்கை எடுக்க அனுமதி கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மாவட்ட ஆட்சியரிடம் கோரியிருந்தார்.

முருகவேல் உள்பட நான்கு பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஒப்புதல் அளித்தார். இதைத்தொடர்ந்து அவர்கள் நான்கு பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்து பாளையங்கோட்டை சிறையிலடைத்தனர்.

குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களில் முருகவேல் என்பவர், ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளரை சரக்கு வாகனம் ஏற்றி கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்.

இவர்கள் மீது ஏரல், சூரங்குடி, செய்துங்கநல்லூர், ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையங்களில் கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இதையும் படிங்க: ஆட்டோவை பறிமுதல் செய்த தனியார் நிதி நிறுவனம்... ஓட்டுநர் தீக்குளித்து தற்கொலை!

ABOUT THE AUTHOR

...view details