வேலூர்: வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா ஒடுக்கத்தூர் அருகே உள்ள மராட்டிய பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அன்பு, வேலாயுதம், அருள்குமார், ஜெயக்குமார் ஆகிய நான்கு பேர்.
இவர்கள் கடந்த சில மாதங்களாக உத்திர காவேரி ஆற்றில் சட்டவிரோதமாக மாட்டு வண்டியில் மணல் கடத்தி விற்பனை செய்து வந்துள்ளனர்.
இதுகுறித்து வேப்பங்குப்பம் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற காவல் துறையினர் நான்கு பேரையும் அதிரடியாக கைது செய்தனர். மேலும் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நான்கு பேரையும் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: ’அவசரத்துல யூனிபார்ம் மறந்துட்டேன்’..; காவலரின் தர்பூசணி திருட்டு