மதுரை:மதுரை - தேனி பிரதான சாலையில் உள்ள விராட்டிபத்து பகுதியில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து, எஸ். எஸ் காலனி காவல் நிலைய உதவி ஆய்வாளர் பேரரசி தலைமையிலான காவலர்கள் அந்த இடத்திற்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில், உசிலம்பட்டி ஐயனார் குளத்தைச் சேர்ந்த செல்லத்துரை (39), மகபூப் பாளையம் சித்தாலாட்சி நகரைச் சேர்ந்த பிரகாஷ் (33), உசிலம்பட்டி மேக்கிலார்பட்டியைச் சேர்ந்த தமிழரசன் (37) ஆகிய மூவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த 31.100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மதுரையில் 36 கிலோ கஞ்சா பறிமுதல்: ஏழு பேர் கைது! - மதுரை குற்றச் செய்திகள்
மதுரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 36 கிலோ கஞ்சாவை காவல் துறையினர் கைப்பற்றியுள்ள நிலையில், பதுக்கல் தொடர்பாக ஏழு பேரை கைது செய்துள்ளனர்.
அதேபோல மதுரை அவனியாபுரம் காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி காவல் உதவி ஆய்வாளர் ஆதி குந்த கண்ணன் தலைமையிலான காவலர்கள் மதுரை வில்லாபுரம் கழிவுநீர் தொட்டி அருகே அதிரடி சோதனை நடத்தினர், அங்கு மணி ராஜா என்ற மதுரை மணி (25), மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த காளீஸ்வரன் என்ற குடில் காளி (24), வில்லாபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த சூர்யா என்ற பரோட்டா, சாயல்குடி பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் பாண்டி (27) என்ற 4 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்
இதையும் படிங்க:ஒற்றை கரும்பால் ஆரம்பித்த கேங் வார்' - ஒருவர் உயிரிழப்பு!