தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

ஓட்டுநரின் வீட்டில் 30 சவரன் நகை கொள்ளை - Chennai district latest news

ராயப்பேட்டையில் பட்டப்பகலில் கார் ஓட்டுநரின் வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் தங்க நகைகளை திருடிய அடையாளம் தெரியாத நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

gold jewelry robbery
தங்க நகைகள் கொள்ளை

By

Published : Jan 23, 2021, 7:57 AM IST

சென்னை ராயப்பேட்டை கோயா அருணகிரி 4ஆவது தெரு பகுதியில் வசித்து வருபவர் முகமது அப்துல்லா. கால்டாக்ஸி ஓட்டுநரான இவர் நேற்று(ஜன 23) காலை தனது மனைவியுடன் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக கோடம்பாக்கம் சென்று விட்டார்.

வீட்டில் அவரது மகன் ஆசிப் மட்டும் இருந்த நிலையில், அவரும் மதிய தொழுகைக்காக வெளியே சென்று விட்டார். அதன் பிறகு, அவர் வீடு திரும்பிய போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே பொருள்கள் சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர், படுக்கை அறையில் இருந்த இரண்டு பீரோக்களின் பூட்டை உடைத்து 30 சவரன் தங்க நகைகள், 65 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இது குறித்து அப்துல்லா அளித்த புகாரின் பேரில் ஐஸ் ஹவுஸ் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: சென்னையில் மீண்டும் தலைதூக்கும் ஆன்லைன் கிரிக்கெட் சூதாட்டம்!

ABOUT THE AUTHOR

...view details