தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

துபாய் டூ சென்னை விமானங்களில் 3 கிலோ தங்கக்கட்டி கடத்தல்!

சென்னை: துபாயிலிருந்து 2 விமானங்களில் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 1.33 கோடி ரூபாய் மதிப்புடைய மூன்று கிலோ தங்கத்தை விமான நிலையத்தில் வருவாய் புலனாய்வு இயக்குநரக (DRI) அலுவலர்கள் பறிமுதல் செய்து இரண்டு பேரை கைது செய்தனா்.

smuggling gold nugget, chennai airport, 30 தங்கக்கட்டி, dri officers, DRI
DRI

By

Published : Sep 12, 2021, 7:55 AM IST

சென்னைக்கு வெளிநாடுகளிலிருந்து வரும் விமானங்களில் பெருமளவு கடத்தல் தங்கம் வருவதாக மத்திய வருவாய் புலனாய்வுத் துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, டிஆர்ஐ தனிப்படையினா் நேற்று முன்தினம் (செப்.10) அதிகாலை சென்னை சா்வதேச விமான நிலையத்திற்கு வந்து திடீா் சோதனை மேற்கொண்டனா். அப்போது சுங்கச்சோதனை முடிந்து வந்த பயணிகளை நிறுத்தி மீண்டும் சோதனையிட்டனா்.

இதில் துபாய், சாா்ஜா, அபுதாபி நாடுகளிலிருந்து வந்த மூன்று விமானங்களின் பயணிகளை சோதனையிட்டு, அதில் சந்தேகத்திற்கிடமான 14 பேரை நிறுத்தி வைத்து விசாரணை மேற்கொண்டனா். அவா்களின் உடைமைகளை முழுமையாக சோதித்தனா்.

30 தங்கக்கட்டிகள்

அப்போது இரண்டு வெவ்வேறு துபாய் விமானங்களில் வந்த திருச்சியைச் சேர்ந்த சின்ன ராசு (38), ராமநாதபுரத்தைச் சோ்ந்த முகமது ஜுலாவூதீன் (35) ஆகிய இருவரும் டிராலி டைப் சூட்கேஸ்களில் (Trolly-type) ரகசிய அறைகள் வைத்து தங்கக்கட்டிகளை மறைத்து வைத்திருந்ததைக் கண்டுப்பிடித்தனா். இந்த இருவரின் சூட்கேஸ்களிலும் 30 தங்கக்கட்டிகள் இருந்தன.

கைது செய்யப்பட்ட இருவரின் சூட்கேஸ்கள்

அவற்றின் மொத்த எடை 3.123 கிலோ, சா்வதேச மதிப்பு 1.33 கோடி ரூபாய். இதையடுத்து தங்கக்கட்டிகளை பறிமுதல் செய்த டிஆர்ஐ அலுவலர்கள் கடத்திய இருவரையும் கைது செய்தனா்.

ஏமாற்றமடைந்த அலுவலர்கள்

மேலும், சந்தேகத்தில் நிறுத்தி வைத்திருந்த மற்ற பயணிகளை சோதனையிட்டதில், அவா்களில் ஒரு சிலரிடம் மட்டும் மிகக்குறைந்த அளவில் தங்கம் இருந்தது. அவா்களிடம் அந்தத் தங்கத்திற்கு சுங்கத்தீா்வை வசூலித்துவிட்டு அனுப்பி வைத்தனா்.

பறிமுதல் செய்யப்பட்ட 30 தங்கக்கட்டிகள்

மூன்று கிலோ கடத்தல் தங்கக்கட்டிகளுடன் பிடிப்பட்ட இருவரையும், தங்கக்கட்டிகளையும் மேல் நடவடிக்கைக்காக சென்னை விமானநிலைய சுங்கத்துறையிடம் டிஆர்ஐ அலுவலர்கள் ஒப்படைத்தனா். டிஆர்ஐ அலுவலர்கள் நீண்ட நாள்களுக்குப் பின்பு சென்னை விமான நிலையத்தில் அதிரடி சோதனைகள் நடத்தினா்.

ஆனால், அவா்கள் எதிா்பாா்த்த அளவு கடத்தல் தங்கம் சிக்காததால், கடத்தல் தங்கம் வழக்கு சென்னை விமான நிலைய சுங்கத்துறையிடமே ஒப்படைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: 'இலங்கை மலையக தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க அழுத்தம் தர வேண்டும்'

ABOUT THE AUTHOR

...view details