உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவைச் சேர்ந்த பட்டியலின சிறுமிகள் மூவர் வயலுக்குப் புல்லறுக்கச் சென்றுள்ளனர். வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால், குடும்பத்தினர் மூவரையும் தேடி வயலுக்குச் சென்றுள்ளனர்.
அப்போது, மூன்று சிறுமிகளும் மயக்கநிலையில் இருந்துள்ளனர். இதனையடுத்து, இது குறித்து காவல் துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.
இதன்பேரில் வந்த காவல் துறையினர் மூன்று சிறுமிகளையும் மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் இரண்டு சிறுமிகள் ஏற்கனவே உயிரிழந்திருந்தனர். மற்றொரு சிறுமி உயிருக்குப் போராடிவருகிறார்.
இது குறித்து உன்னாவ் காவல் கண்காணிப்பாளர் ஆனந்த் குல்கர்னி கூறுகையில், “இரண்டு சிறுமிகள் மருத்துவமனையில் உயிரிழந்தனர். இன்னொரு சிறுமி மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார்.
முதல்கட்ட தகவல்களின்படி, சிறுமிகள் விஷம் குடித்ததற்கான அறிகுறிகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். விசாரணை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
உ.பி.யில் 2 பட்டியலின சிறுமிகள் சந்தேக மரணம்: மற்றொரு சிறுமி உயிருக்குப் போராட்டம்! இது குறித்து விசாரிக்க ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. உடலில் காயங்கள் எதுவும் இல்லை. உயிரிழந்த சிறுமிகளில் ஒருவரின் தாய், சிறுமியின் வாயிலிருந்து நுரை தள்ளியிருப்பதாகவும், துணி சரியாக இருந்ததாகவும் ஆனால் கழுத்தில் கைக்குட்டையால் இறுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்” என்றார்.
இதையும் படிங்க...மதுரவாயலில் மணமக்களுக்கு பெட்ரோலை பரிசளித்த நண்பர்கள்!