மத்தியப் பிரதேச மாநிலத்தில், கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, அம்மாநிலத்திலுள்ள மருத்துவமனையில் அதிக எண்ணிக்கையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
ஆக்ஸிஜன் சிலிண்டரை மாற்ற தாமதம்: கரோனா நோயாளிகள் மூவர் உயிரிழப்பு!
போபால்: ஆக்ஸிஜன் சிலிண்டரை மாற்ற தாமதமானதால், மத்தியப் பிரதேச மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த கரோனா நோயாளிகள் மூவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில், இன்று(ஏப்.26) சிகிச்சைப் பெற்று வந்தவர்களுக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர் முடிவடைந்த நிலையில் உடனே மாற்று ஆக்ஸிஜன் சிலிண்டரை பொருத்த நேரமாகியது. காலதாமதமாக ஆக்ஸிஜன் சிலிண்டர் பொருத்தப்பட்டதால், சிகிச்சையில் இருந்த கரோனா நோயாளிகள் மூவர் உயிரிழந்தனர்.
சரியான நேரத்தில் மாற்று ஆக்ஸிஜன் சிலிண்டர் பொருத்தப்படாததால் மூவர் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனேவே மத்திய பிரதேசத்தில் ஆக்ஸிஜன், ரெம்டெசிவிர் மருந்துகள் பற்றாக்குறை நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.