கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கக்கனுா் பகுதியில் உள்ள தனியார் அடுக்கு மாடி குடியிருப்பில் அகில்குமார்- பிரீத்தி தம்பதி வசித்து வருகின்றனர். அகில்குமார் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஆவார். நேற்றிரவு (பிப்.6) முகமூடி அணிந்த அடையாளம் தெரியாத நபர்கள் அவரது வீட்டுக்குள் நுழைந்து அகில்குமார், அவரது மனைவியை கத்தி முனையில் மிரட்டி 24 சவரன் தங்க நகை மற்றும் 12ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
இன்று காலை வழக்கம் போல் வீட்டிலிருந்து யாரும் வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது, அகில்குமாரும், அவரது மனைவியும் கை, கால்கல் கட்டப்பட்ட நிலையில் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் மீட்ட அப்பகுதி மக்கள் உடனடியாக பகலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.